ஜூன் 26ம் தேதி ஒலிபரப்பாகவுள்ள , இம்மாதத்திற்கான மனத்தின் குரல் நிகழ்ச்சிக்கான உள்ளீடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “26ம் தேதி ஒலிபரப்பாகவுள்ள இந்த மாதத்தின் மனத்தின் நிகழ்ச்சிக்கு பல உள்ளீடுகளைப் பெற்றதில் மகிழ்ச்சி. உங்கள் யோசனைகளை MyGov அல்லது NaMo Appல் தொடர்ந்து பகிர்ந்து வரவும்” என தெரிவித்துள்ளார்.