அரியலூர் பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு இலங்கையில் இருந்து குரல் எழுந்துள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதி திருநெல்வேலியில் இருந்து உருத்திரசேனை என்ற அமைப்பின் சார்பில் பிரதமர் மோடிக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், ‘ஹிந்துக்கள் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு மதமாற்றத்துக்கு உள்ளாவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த சிறுமிக்கும் சிறுமியின் பெற்றோருக்கும் தகுந்த நீதி வழங்கப்பட வேண்டும். ஹிந்து மாணவர்கள் மற்றும் பாரதத்தில் இருக்கும் ஹிந்துக்கள் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு மதமாற்றத்துக்கு உள்ளாவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மதமாற்றத்திற்கு எதிராக போராடி தனது உயிரை இழந்துள்ள இந்த பாரதத் தாயின் குழந்தைக்கும் அவரது குடும்பத்துக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கையில் உள்ள ஹிந்துக்களாகிய நாங்கள் பாரதத் தாய் எங்களுக்கு அளித்துள்ள பங்களிப்புக்காக எப்போதும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்’ என்று அதில் கோரப்பட்டு உள்ளது. இந்த விஷயத்தில் டெல்லி முதல் இலங்கை வரை நீதி கேட்டு குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால், தமிழக அரசின் காதில்தான் அது கேட்கவில்லை.