நோக்கு கூலி

கேரளாவில் வாகனங்களில் இருந்து சுமைகளை இறக்க ஏற்ற சுமை தொழிலாளர்களை பயன்படுத்தாமல் சொந்தமாகவோ இயந்திரத்துடனோ அவற்றை கையாண்டால்கூட அதனை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்ததற்காக சுமை தொழிளார் சங்கத்திற்கு ‘நோக்கு கூலி’ என்ற ஒன்று கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறை பல காலமாக உண்டு. இது போன்ற பல்வேறு கம்யூனிச சிந்தனைகள்கூட அம்மாநிலம் தொழில்துறையில் வளராமல் போனதற்கு ஒரு காரணம். அங்குள்ள மத்திய மாநில அரசுத்துறை நிறுவனங்கள்கூட இப்படி நோக்கு கூலி கொடுத்துவந்தது என்பது வேதனை. நீதிமன்றம் இம்முறையை ஒழிக்க வேண்டும் என கூறியும்கூட இது இன்றும் தொடர்கிறது. சமீபத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்தில் இயந்திரம் உதவியால் சில பொருட்கள் இறக்கிய பிறகு நோக்கு கூலி கேட்டு லாரியை மடக்கினர் அங்குள்ள தொழிலாளர்கள். இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. தொழிலாளர்துறை அதிகாரிகள், காவல் அதிகாரிகள் வந்து சமாதானம் பேசி அவர்களை அனுப்பி வைத்தனர்.