விஷ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மத்திய பாரத செயற்குழு கூட்டம் போபாலில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வி.ஹெச்.பி செயல் தலைவரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அலோக்குமார், ‘’கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க 11 மாநிலங்களில் சட்டங்கள் உள்ளன, இருப்பினும், இந்த பிரச்சனை நாடு முழுவதும் உள்ளது. எனவே இந்த பிரச்சினையை நாடு முழுவதும் ஒருமனதாக எழுப்ப வேண்டும். சட்டவிரோத மதமாற்றங்களுக்கு எதிரான சட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டும். அப்போதுதான் இந்த சாபத்திலிருந்து நாட்டிற்கு விடுதலை கிடைக்கும். இது குறித்த நீதிமன்ற வழக்குகள், கடந்த கால அனுபவங்கள், தற்போதைய சூழ்நிலைகள் அனைத்தும் இதற்கான அவசியத்தை மத்திய அரசுக்கு தெளிவாக உணர்த்துகிறது. எனவே மத்திய அரசு, இனியும் காலதாமதமின்றி முழு தேசத்திற்குமான கட்டாய மத மாற்றத்தடை சட்டத்தை இயற்ற வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.

‘முஸ்லிம், கிறிஸ்துவ மத அமைப்புகள் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால், ஹிந்து வழிபாட்டுத் தலங்கள், மடங்கள் அனைத்தும் அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும். பாரத எதிர்ப்பு மற்றும் ஹிந்து விரோத சதித்திட்டங்கள் குறித்து ஹிந்து சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அனைத்து சட்டம், அரசியலமைப்பு முறைகள் மூலம் அதை தடுக்க வேண்டும்’ என அந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.