வன்முறையில் ஈடுபடும் அடிப்படைவாதிகள்

குஜராத்தின் கெடா மாவட்டத்தின் உந்தேரா கிராமத்தில் நவராத்திரி விழாவைக் கொண்டாடியவர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் சுமார் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல் வீச்சில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்தனர். இதையடுத்து கிராமத்தில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவராத்திரி கொண்டாட்டத்தின் போது, ​​ஆரிப் மற்றும் ஜாஹிர் ஆகிய இரண்டு முஸ்லிம் நபர்கள் தலைமையிலான ஒரு கும்பல், இந்த வன்முறையில் ஈடுபட்டது. ஊர் தலைவர்கள் சமாதானம் செய்தனர். ஆனால் அந்த வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் மீண்டும் திரும்பி வந்து கற்களை வீசினர். அப்பகுதியில் நவராத்திரி கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என மிரட்டினர். முன்னதாக, இந்த நவராத்திரி கொண்டாட்டத்தின் போது கர்பா நடன நிகழ்ச்சியை நிகழ்த்துவதற்குப் பதிலாக, கெடாவில் உள்ள ஒரு முஸ்லிம் பள்ளி ஆசிரியர், மாணவர்களை மார்பில் அடித்து, முஹரம் பாணியில் துக்கம் அனுசரித்து ‘யா ஹுசைன்’ என்று கோஷமிடச் செய்ததாக கடந்த வாரம் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும், நவராத்திரி விழா அரங்கிற்குள் முஸ்லிம் ஆண்கள் போலியான பெயர்களில் நுழைய முயன்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.