மேற்கு வங்கத்தில் வன்முறை

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவின் புறநகர் பகுதியான மொமின்பூரில் சரத் பூஜை எனப்படும் லட்சுமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான ஹிந்துக்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்குள்ள முஸ்லிம்கள், லட்சுமி பூஜையில் பங்கேற்ற ஹிந்துக்களின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். கடைகளை தீ வைத்து கொளுத்தினர். இந்த வன்முறையால் ஏராளாமான ஹிந்துக்கள் பாதிக்கப்பட்டனர்.

அம்மாநில பா.ஜ.க தலைவர் சுகந்த மஜும்தர், இந்த வன்முறை சம்பவ வீடியோக்களை வெளியிட்டு, “காவல்துறையினர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை. நிலைமை மோசமாக உள்ளது, ஆனால் முதல்வர் மமதா பானர்ஜியோ ஹிந்துக்கள் பாதிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். எனவே, மொமின்பூர் வன்முறையை தடுக்க மாநில காவல்துறை தவறியதால், உடன‌டியாக மத்திய பாதுகாப்புப் படைகளை அனுப்ப வேண்டும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பா.ஜ.க தலைவர் ப்ரீதம் சூர், தெருக்களில் வன்முறையை கட்டவிழ்த்து விடப்படுவதை காட்டும் பயங்கரமான காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், “எங்கள் மீது வெடிகுண்டுகள் மற்றும் செங்கற்கள் வீசப்படுகின்றன. காவலர்கள் கூட தங்களை தற்காத்துக்கொள்ள அங்கிருந்து ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. லட்சுமி பூஜையின் போது ஜனநாயகத்தின் முகம் கருமையாகிவிடும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் சுவேந்து அதிகாரி, எக்பால்பூர் காவல் நிலையத்தில் குண்டர்கள் முற்றுகையிட்டதால், காவல்துறையினர் அங்கிருந்து தப்பியோடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த கும்பல் முஸ்லிம் கொடிகளை காவல் நிலையத்தில் அசைத்துக்கொண்டிருந்தது. சுவேந்து அதிகாரியும் மத்திய உள்துறை அமைச்சருக்கு நிலைமையை கட்டுப்படுத்த மத்திய படைகளை அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே, மொமின்பூர் ஹிந்து எதிர்ப்பு வன்முறையின் பின்னணியில், குலாம் அஸ்ரஃப் (பீனிக்ஸ் குழும உரிமையாளர்), ரெஹான் கான் (திருணமூல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலரின் மருமகன்) மற்றும் திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஃபிர்ஹாத் ஹக்கீமின் நெருங்கிய உதவியாளர் ஷாபாஸ் ஆலம் ஆகியோர் உள்ளதாக டுவிட்டர் பயனாளர் சையத் இஷ்டியாக் ஆலம் தெரிவித்துள்ளார்.