சமீபத்தில் பீகார் மாநிலம், பூர்னியாவில் மகா-தலித் என்ற பட்டியலின குடும்பங்கள் மீது முஸ்லிம் ஜிஹாதிகள் நடத்திய கொடூரமான வன்முறைத் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள ‘விஷ்வ ஹிந்து பரிஷத்’ (வி.எச்.பி) பாதிக்கப்பட்ட மகா-தலித் குடும்பங்களுக்கு விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
வி.எச்.பி.யின் மத்திய பொதுச்செயலாளர் ஸ்ரீ மிலிந்த் பராண்டே இது குறித்து பேசுகையில், ‘கடந்த புதன்கிழமை நள்ளிரவில், நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கொண்ட ஒரு கும்பல், கிட்டத்தட்ட இரண்டு டஜன் வீடுகளைத் தாக்கியழித்து தீ வைத்தது, மேவா லால் ராய் என்பவரை கொடூரமாக தாக்கிக் கொன்றனர் இந்த பயங்கரவாதிகள். ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் தலையை உடைத்ததுடன், எராளமான பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து உறுப்பினர்கள் மீதும் மனிதாபிமானமற்ற கொடுமைகளைச் செய்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். மூன்று வயது சிறுவன் தீவானா காணாமல் போய் உள்ளான். இந்த ஜிஹாதி கும்பலில் பங்களாதேஷ் மற்றும் ரோஹிங்கியா முஸ்லீம் ஊடுருவல்காரர்களும் இருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த கொடூர வன்முறை சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆன பிறகும், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு, தேவையான அவசர உதவிகள், மறுவாழ்வு எதுவும் கிடைக்கவில்லை. கொடூரமான இந்த சம்பவங்கள் குறித்து உள்ளூர் காவல்துறை, நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் அக்கறையின்மை மிகவும் கவலை அளிக்கிறது. சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும், தாமதமின்றி கைது செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பு, நிதி உதவி மற்றும் மறுவாழ்வுக்காக உள்ளூர் நிர்வாகம் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். இந்த தாக்குதல் சம்பவம், மேற்கு வங்கத்தில் திருணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முஸ்லிம் வன்முறையாளர்கள் நடத்தய மிருகத்தனமான வன்முறைத் தாக்குதல்களின் பிரதிபலிப்பாகவே உள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி), தேசிய பெண்கள் ஆணையம் (என்.சி.டபிள்யூ), குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) மற்றும் பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம் (என்.சி.எஸ்.சி) ஆகியவை இந்த கொடூரத்தை உணர்ந்து நேரடி நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். இந்த கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து சிலர் அரசியல் லாபங்களுக்காக மீண்டும் “மீம்-பீம்” கோஷத்தை கையில் எடுத்துள்ளனர். இத்தகைய போலி முழக்கங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் சில நிழல் கதாபாத்திரங்கள், நீண்ட காலமாக ஹிந்து சமுதாயத்தின் இந்த வலிமைமிக்க பட்டியலின சமூகத்தை வன்முறைகளுக்கு தொடர்ந்து பலியாக்கி வந்துள்ளனர்.
இத்தகையோரின் அரசியல் தந்திரங்களில் சிக்கி நாம் பலியாகக்கூடாது. இத்தகைய அரசியல்வாதிகள் ஏன் முஸ்லிம் ‘இ-ஹிந்த் ஜிஹாதி’ பயங்கரவாதிகள் குறித்து வாய் திறப்பதில்லை என சிந்திக்க வேண்டும். வேதனைக்குள்ளான அனைத்து மகா-தலித் குடும்பங்களின் பாதுகாப்பு, இழப்பீடு மற்றும் மறுவாழ்வு உறுதி செய்யப்படும் வரையிலும் வன்முறையாளர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரையிலும் ஹிந்து சமூகம் அமைதியாக இருக்க முடியாது’ என்று தெரிவித்தார்.