கேரளாவில் பட்டணம் மற்றும் மதிலகம் ஆகிய இடங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள டிரான்ஸ் டிசிப்ளினரி மேம்பாட்டு நிறுவனத்திற்கு இந்திய தொல்லியல்துறை அனுமதி அளித்தது. ஆனால், அந்நிறுவனம் எவ்வித முன் அனுமதியும் இல்லாமல் தொல்லியல் துறையின் சின்ன்ங்கள், பெயரை பயன்படுத்தியது. மேலும், அங்கு பயிற்சி பெற வரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதும் கண்டறியப்பட்டது. இது தொல்லியல்துறையின்த விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அந்நிறுவனத்துக்கு அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.