மொய்னாபாத்தில் அமைந்துள்ள டாக்டர் ஆர்.ஜி. ஆசாத் பொறியியல் கல்லூரி, வளாகத்தில் அமைந்துள்ள தெலுங்கானா சமூக நல குடியிருப்பு கல்வி நிறுவனங்கள் சங்கம் (டி.எஸ்.வெரிஸ்) என்ற கல்வி நிறுவனம், கொரோனா பொதுமுடக்க காலத்திலும் விதிமுறைகளை மீறி, 300 மைனர் குழந்தைகளுக்கு வகுப்புகளையும் விடுதியையும் நடத்தியது. சட்ட உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு (எல்.ஆர்.பி.எப்) இது குறித்து அளித்த புகாரைத் தொடர்ந்து, அங்கு ஆய்வு செய்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) உறுப்பினர் ஆனந்த் தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், கல்லூரி நிர்வாகம், வகுப்புகளை நடத்திய உறுப்பினர்கள், செயல்பாட்டாளர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தெலுங்கானா அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர், சைபராபாத் காவல்துறை ஆணையருக்கு என்.சி.பி.சி.ஆர் உத்தரவிட்டுள்ளது.