விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அமைப்பின் மத்திய ஆலோசனைகுழு கூட்டத்தின் இரண்டு நாள் மாநாடு, ஹரித்வாரில் உள்ள நிஷ்காம் சேவா சதானில் நடைபெற்றது. மாநாட்டின் முதல் அமர்வு, பெஜாவர் மடத்தின் சுவாமி விஸ்வ பிரசன்ன தீர்த்த மகராஜ் தலைமையில் நடைபெற்றது. இரண்டாவது அமர்வுக்கு ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி வாசுதேவானந்த சரஸ்வதி மகராஜ் தலைமை வகித்தார். இதில் வி.ஹெச்.பியின் அகிலஉலக பொதுச் செயலாளர் மிலிந்த் பராண்டே, செயலாளர் அஷோக் திவாரி, துணைத் தலைவர் மற்றும் ஸ்ரீராம ஜென்மபூமியின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தேசிய அளவிலான இந்த கூட்டத்தில் சுவாமி அவதேஷானந்த் கிரி மஹராஜ், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சுவாமி சிதானந்த முனி, சுவாமி சக்தி சாந்தானந்தா, ஞானந்த மகராஜ், கிருஷ்ணானந்த்ஜி மகராஜ் உள்ளிட்ட பல்வேறு மடங்களை சேர்ந்த 178 ஆண் துறவிகளும் 34 பெண் துறவியரும் கலந்துகொண்டனர்.
சமூகம் மற்றும் நாட்டின் அடிப்படை அலகான குடும்பம் என்ற அமைப்பை வலுப்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அதை அடைய குடும்பம், சமூகம், தெய்வீக உணர்வை மக்களிடையே எழுப்பி மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம். தேசம் முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும்,கட்டாய மதமாற்றங்களை தடுக்க வேண்டும், அதற்கு கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும், கோயில்கள், மடங்கள் மீதான மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளும் ஆக்கிரமிப்புகளும் முடிவுக்கு வர வேண்டும். இதற்காக தேசம் தழுவிய பொதுமக்கள் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த வேண்டும் என தீர்மானங்கள்; நிறைவேற்றப்பட்டன. மேலும், நாட்டில் தற்போது தூண்டப்படும் சில பிரச்சனைகள் சில மாற்று மதவாதிகளின் திட்டமிடப்பட்ட சதி, இதற்கு எதிராக மத்திய அரசு பயனுள்ள சட்டத்தை இயற்ற வேண்டும். பஞ்சாபின் தற்போதைய நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது. கொடூரமான பயங்கரவாத காலகட்டம் மீண்டும் நிகழும் விளிம்பில் பஞ்சாப் உள்ளது. பஞ்சாப் மக்கள் சீக்கிய குருமார்களின் போதனைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். ஹிந்து ஆன்மீக நூல்களின் பரப்பளவும் நோக்கமும் இமயமலையை விட உயர்ந்ததாகவும், கடல்களை விட ஆழமானது. வி.ஹெச்.பியின் இந்தக் கூட்டம் துறவிகள் சமாஜத்தின் எண்ணங்களைத் தூண்டுவதாக உள்ளது. இதில் இருந்து அமிர்தத்துக்கு ஒப்பான உத்வேகங்களும் முன்முயற்சிகளும் வெளிப்படும் என்றும் கூறினார். இது முழு உலகிற்கும் ஒரு அர்த்தமுள்ள செய்தி. என்ர சில கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.