ஹிந்துக்களுக்கு உதவ வி.எச்.பி வேண்டுகோள்

வங்காளத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஹிந்து சமுதாயத்திற்கு உதவ, ஆதரவு மற்றும் மறுவாழ்வு அளிக்க நாட்டு மக்கள் முன்வருமாறு வி.எச்.பி அழைப்பு விடுத்துள்ளது. ‘மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகான ஹிந்துக்கள் மீதான திட்டமிட்ட வன்முறை தாக்குதல்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் வீடற்றவர்களாகியுள்ளனர். 40,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 142 பெண்கள் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு ஆளானார்கள். 5,000 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. 7 இடங்களில், ஹிந்துக்களின் வசிப்பிடங்கள் புல்டோசர்களால் இடித்துத் தள்ளப்பட்டு அங்கு இரவோடு இரவாக மசூதிகள் கட்டப்பட்டுள்ளன. கஸ்வா-இ-ஹிந்த் ஜிஹாதிகள் ஹிந்துக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மீது 1,627 தாக்குதல்கள் நடந்தன. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக மாறி அசாம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். பட்டியல் சமூக மக்களை குறிவைத்து மட்டுமே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கொடூரமான வன்முறை 1947 ல் பாரத பிரிவினையையின்போது நிகழ்ந்த வன்முறை, படுகொலைகளை நினைவூட்டுகிறது மேற்கு வங்க ஆளுநர் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை நேரில் கேட்டு ​​நிலைமையின் கொடூரத்தை அறிந்தார். அப்போது அவர், ‘என் மாநில மக்கள் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்’ என்று குரல் தழுதழுக்க ஆளுனர் கூறினார். மேலும், ‘மேற்கு வங்கம் ஹிந்துக்களுக்கு ஒரு எரிமலையாக மாறிவிட்டது’ என்று சொல்லும் அளவிற்கு ஆளுனர் தள்ளப்பட்டார். கொடுமைகளைத் தடுக்க, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி), பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம் (என்.சி.எஸ்.சி), தேசிய பெண்கள் ஆணையம் (என்.சி.டபிள்யூ) மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) போன்ற பல சட்டரீதியான அமைப்புகளும் கோரியுள்ளன. நமது தேசத்தின் தர்மத்தைப் பாதுகாக்க போராடி வரும் மேற்கு வங்க ஹிந்து சமுதாயத்துடன் முழு நாடும் துணையாக நிற்க வேண்டும். அவர்களுக்கு அனைத்து விதத்திலும் உதவ நாம் தயாராக இருக்க வேண்டும்.

 

வீடு இழந்த ஹிந்துக்களுக்காக வீடுகள் கட்டிக்கொடுப்பது, சூறையாடப்பட்ட வீடுகளை புனரமைத்தல், மீள்குடியேற்றம், அனாதைக் குழந்தைகளுக்கு வாழ்க்கைகான ஏற்பாடுகள் செய்தல், காயமடைந்தவர்களுக்கான மருத்துவ உதவிகள், ஹிந்துக்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய்யான வழக்குகளை எதிர்த்துப் போராடுவது, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தொழில்களை மீண்டும் தொடங்க உதவுதல், உடைக்கப்பட்ட கோயில்களை புனரமைத்தல், இந்த வன்முறையில் உயிரிழந்த ஹிந்துக்களைச் சார்ந்தவர்களுக்கு உதவுதல், ஹிந்து சமுதாயத்தின் தடுப்பு மற்றும் வலிமைமிக்க சக்தியை உருவாக்குதல் போன்ற பல பணிகள் நம் முன் உள்ளன. பேரழிவைச் சந்தித்த நம் ஹிந்து சொந்தங்களுக்காக இது போன்ற பல பணிகள் இங்கு மேற்கொள்ளப்பட வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட இவர்கள் தற்போது கொரோனா தொற்றுநோயையும் எதிர்த்துப் போராடி வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதில் நாம் அனைவரும் குடிமக்கள் நாடு முழுவதும் ஈடுபட்டுள்ளோம்; இந்த பேரழிவுகளிலிருந்து மேற்கு வங்கத்தை நாம் காப்பாற்ற வேண்டும்’ என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மத்திய பொதுச்செயலாளர் மிலிந்த் பராண்டே தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் உள்ள நமது ஹிந்து சொந்தங்களுக்கு உதவ நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம். அதற்கான வங்கி விவரங்கள்: Bank Account Details

(1) Vishva Hindu Parishad, A/c no: 04072010017250, Bank: Punjab National Bank, Branch: Basant Lok, New Delhi, IFSC code: PUNB 0040710, PAN: AAATV0222D, (80 G Not available)

(2) Bharat Kalyan Pratisthan, A/c No.: 04072010019960, Bank: Punjab National Bank, Branch: Basantlok, New Delhi, IFSC Code: PUNB 0040710, PAN: AAATB 0428P