வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு

பா.ஜ.க சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம், ‘தி.மு.க, ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்படுகிறது. வாரம் மூன்று நாட்கள் ஹிந்து கோயில்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது கேலிக்கூத்து. பொது சொத்துக்கள், உட்கட்டமைப்பு நிலங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதை, மத்திய அரசு தனியாருக்கு விற்கிறது என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் திரித்துக் கூறியது கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் ஆட்சியின் போது, எண்ணெய் நிறுவனங்களுக்கு, ரூ. 3 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்றுவிட்டது. அதனை தற்போது மத்திய அரசு செலுத்தி வருகிறது. தமிழகத்தில் மதவாத பிரச்னையை துாண்டுபவர்களின் கை ஓங்கியுள்ளது. இவர்கள், இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றுகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதிக்க வேண்டும். மாநில பா.ஜ.க நிர்வாகிகளுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிப்பதில்லை’ என கூறினார்.