வீரமணியின் ஆகாசப்புளுகு

விடுதலை போராட்ட வீரரான செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளை, ஈ.வெ.ராமசாமி நாயக்கரை தனது குருவாக ஏற்றுக் கொண்டார் என்று வாய் கூசால் மிகப் பெரிய பொய்யை கூறியுள்ளார் திராவிட கழகத் தலைவர் வீரமணி. அடிப்படைகூட தெரியாமல் பேசும் கி. வீரமணியின் இக்கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது, நகைப்புக்கு இடமாகியுள்ளது. பாரத தேசத்திற்காக அளவிலா கொடுமைகள் அனுபவித்தவர் வ.உ.சி. மாடுகள் கூட இழுக்க முடியாத செக்கை இழுத்தது குறித்து கேட்டபோது, ‘செக்கையா இழுத்தேன். பாரதமாதாவின் தேரை அல்லவா இழுத்தேன்’ என கூறியவர் வ.உ.சி. ஆனால், பாரதத்திற்கு சுதந்திரம் தரக்கூடாது என்று கூறியவர், வெள்ளையார்கள் பாரதத்தை விட்டு போக கூடாது என்று வலியுறுத்தியவர் ஈ.வெ.ரா. வ உ சி 1936களிலேயே மறைந்துவிட்டார். ஆனால், ஈ.வே.ரா நீதிக்கட்சி தலைவர் ஆனதே 1939ல் தான். அப்படி இருக்க ஈ.வேராவை எப்படி வ.உ.சி குருவாக ஏற்று கொண்டு இருக்க முடியும், ஈ.வே.ராவை பெருமைப் படுத்துவதாக நினைத்துக்கொண்டு வ.உ.சி’யை சிறுமைப் படுத்துகிறாரா வீரமணி? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.