வீரமங்கை நிகிதா கௌல்

2018ல் புல்வாமா தாக்குதலில் மேஜர் விபூதி சங்கர் தூந்தியால் வீரமரணமடைந்தார். கணவரை இழந்த சோகத்தில் இருந்து மீண்டு, அவரின் லட்சியம் காக்கும் மனைவியாக, அடுத்த சில மாதங்களிலேயே ராணுவ பயிற்சியில் சேர்ந்தார் அவரின் மனைவி நிகிதா கௌல். சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார். பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள், ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சி ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் நடந்தது. இதில் நிதிகா கௌலுக்கு இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்டர் ஜென்ரல் ஒய்.கே ஜோஷி ஸ்டார்கள் வழங்கி ராணுவத்தில் இணைத்தார். ‘என் கணவர் கடந்து வந்த அதே பயணத்தை நான் அனுபவித்திருக்கிறேன். அவர் எப்போதும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பார் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார் அந்த வீர மங்கை நிதிகா கௌல். இவருக்கு தேசம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.