கைத்துப்பாக்கி கேட்கும் வி.ஏ.ஓக்கள்

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சி, இரண்டு வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. என்றாலும் அது, மக்கள் விரும்பும் இந்த ஆட்சியாக இல்லை என்பதே மக்களின் கருத்து. போதை மருந்து புழக்கம், கடத்தல், கொலை, கொள்ளை, திருட்டு, தி.மு.கவினரின் ரௌடியிசம், கட்டப்பஞ்சாயத்து, கவுன்சிலர்களின் அராஜகம் போன்றவற்றால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது ஒரு பக்கம் என்றால், அவ்வப்போது வெளியாகி வரும் அக்கட்சியினரின் ஊழல்கள், சொத்துப் பட்டியல்கள் எல்லாம் மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்து வருகின்றன. திராவிட மாடல் ஆட்சியில், அரசு ஊழியர்கள் கூட பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே கிராம நிர்வாக அதிகாரி ( வி.ஏ.ஓ) லூர்தூ பிரான்சிஸ் சமூக விரோதிகளால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சூழலில், தங்களது பாதுகாப்பை உறுதிசெய்யவும், தற்காப்பு பயிற்சி அளித்து கைத்துப்பாக்கி வழங்கவும் வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.