தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில், வானதி சீனிவாசன் தலைமையில், வீடுகள்தோறும் தேசிய தேசிய கொடி நிகழ்ச்சிக்கான மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய வானதி சீனிவாசன், “சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுவதற்காக நிகழ்ச்சிகளை முன்கூட்டியே துவக்க வேண்டும். இளைஞரணி சார்பில், வரும் 9ம் தேதி முதல் ‘பைக்’ பேரணி நடத்தப்பட வேண்டும்.தமிழகம் முழுதும் வரும் 13ம் தேதி, மகளிரணி சார்பில் ஒவ்வொரு பகுதியிலும் தேசிய கொடியை கையில் ஏந்தி, ‘வந்தே மாதரம்’ பாடலை பாடியபடி ஊர்வலம் நடத்த வேண்டும். மாரத்தான் ஓட்டம், பள்ளி, கல்லுாரிகளில் பேச்சு போட்டிகள் போன்றவை நடத்தப்பட வேண்டும். சுதந்திர தினத்தையும் பண்டிகைகளை போல உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினரை கௌரவிக்க வேண்டும்” என்று கூறினார்.