மத்திய பிரதேசத்தில் தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்று இந்தூர் மாவட்டம். அங்கு வசிக்கும் பாகிஸ்தான் அகதிகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று அவர்களின் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரி டாக்டர் பிரவீன் ஜாடியா மூலம் இதனை அறிந்த முதல்வர் அலுவலகம் உடனே அதற்கு ஒப்புதல் அளித்தது. அவர்கள் தங்கள் பாஸ்போர்ட் அல்லது எதாவது அடையாள அட்டையைக் காட்டி நகரிலுள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 5,000 பாகிஸ்தான் அகதிகள் இந்தூரில் உள்ள சிந்தி காலனி உள்ளிட்டப் பகுதிகளில் உள்ளனர்.