ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி

மத்திய சுகாதராத்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ‘அரசு, தனியார் நிறுவனங்கள் விதிகளுக்கு உட்பட்டு, பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினர், அவர்களை சார்ந்திருப்போருக்கு பணியாற்றும் இடங்களில் தடுப்பூசி செலுத்தலாம் அல்லது தடுப்பூசி மையத்திலும் செலுத்திக் கொள்ளலாம். தனியார் நிறுவனங்கள் முன்னதாக தடுப்பூசிக்காக ஒப்பந்தம் செய்துள்ள தனியார் மருத்துவமனையிலேயே தடுப்பூசியைக் கொள்முதல் செய்து ஊழியர்களின் குடும்பத்தாருக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அரசு ஊழியர்களின் குடும்பத்தினர், சார்ந்திருப்போர் 45 வயது அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தால், அரசின் தடுப்பூசி மையத்துக்குச் சென்று இலவசமாகத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அரசு ஊழியர்களின் குடும்பத்தினர், சார்ந்திருப்போர் 18 முதல் 44 வயதுடையவர்களாக இருந்தால், அந்தந்த மாநிலஅரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளது.