வி,ஹெச்.பி ஆர்பாட்டம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் துாணில் கார்த்திகை மஹா தீபம் ஏற்றக்கோரி 16 கால் மண்டபம் முன்பு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றாததையும், மோட்ச தீபம் ஏற்றப்படும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றி ஆகம விதிக்கு புறம்பான செயலை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. வி.ஹெச்.பி மாவட்ட தலைவர், நிர்வாகிகள், மகளிரணி பொறுப்பாளர்கள் என பலர் இந்த ஆர்பாட்டத்தில் பங்குகொண்டனர்.