உத்தரப் பிரதேசம் ஜபல்பூருக்கு கடந்த 2020ம் ஆண்டில் அஸ்லம் கான் என்ற முஸ்லிம் நபர் வேலைக்காக குடியேறினார். அங்கு சிமென்ட் தொழிற்சாலையில் அவருக்கு வேலை கிடைத்தது. சிம்ரன் படேல் என்ற ஹிந்து பெண்ணுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. அஸ்லம் கான் தன்னை சஞ்சய் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த பெண்ணை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிம்ரன் படேலுக்கு தனது கணவர் அஸ்லாம் கான் என்ற முஸ்லிம் என்பதை உணர்ந்தார். சிம்ரன் இந்த உண்மையை குறித்துக் கேட்டதால் அஸ்லம் கான் சிம்ரனை ஜபல்பூரில் தனியாக விட்டுவிட்டு ஃபதேபூருக்குத் தப்பியோடினார். சிம்ரன் படேல் இது குறித்து தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். லவ் ஜிஹாத்துக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட போதிலும், உத்தரபிரதேச மாநிலத்தில் லவ் ஜிஹாத் சம்பவங்கள் குறைவதாகத் தெரியவில்லை. கடந்த ஜூலை 11 அன்று, உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் இம்ரான் என்ற இளைஞர் ஒரு ஹிந்து பெண்ணை லவ் ஜிஹாத்தில் சிக்க வைக்க தனது மத அடையாளத்தை மறைத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதுடன் பாலியல் பலாத்காரம் செய்தார் என்ர வழக்கு பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி, ராம்பூர் பராதாரி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை வசீம் அன்சாரி, ரவி சர்மா எனகூறி ஏமாற்றி அவரது அந்தரங்கப் படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டிய பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு பதிவாகியுள்ளது. ஏப்ரலில், ஒரு மைனர் பெண்ணிடம் தன்னை ராகுல் என்று காட்டிக் கொண்ட காசிம் என்ற நபர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. முஸ்லீம் ஆண்கள் தங்கள் மத அடையாளங்களை மறைத்து பொய் கூறி முஸ்லிமல்லாத பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது, வலுக்கட்டாயமாக திருமணம் செய்து மதமாற்றம் செய்வது போன்ற பல லவ் ஜிஹாத் வழக்குகள் நடைபெற்றுள்ளன.