வாட்ஸ்ஆப் நிறுவனம் தன் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான கொள்கையில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி,தன் பயனாளிகளின் தகவல்கள் தனது தாய் நிறுவனமாக முகநூலுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு இதனை கடுமையாக எதிர்த்தது. மேலும், இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு நேற்று விசாரணையின்போது, தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான மசோதா நிறைவேறும்வரை, தனிநபர் கொள்கையை நிறுத்தி வைக்கிறோம், அதனால் முகநூலுடன் தன் பயனாளர்களின் தகவல்கள் பகிரப்படாது. எங்களின் புதிய கொள்கையை ஏற்காவிட்டாலும், சேவையை பயன்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்றும் வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 27க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.