அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வரும் சூழலில், தாலிபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டின் எல்லைப்புற மாகாணங்களை வேகமாக கைப்பற்றி வருகின்றனர். அமெரிக்க வல்லுனர்களின் கருத்துப்படி, ஆப்கானிய அரசு அதிகபட்சம் ஆறு மாதங்கள் தாக்குப் பிடிக்கலாம். ஒருவேளை போர் தீவிரமானால், ஆப்கன் ராணுவத்தினர் அதற்குள்ளாகவே தங்களை காத்துக்கொள்ள பின்வாங்கிவிடவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று கவலை தெரிவித்துள்ளனர்.