பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவ தளம்

சமீபகாலமாக சீனாவின் பக்கம் அதிகமாக சாய்ந்து வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு எழுதியுள்ள ஒரு கட்டுரையில், ‘ஆப்கானிஸ்தானில் பின்லேடனை தேடும் பணிக்காக பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்க படைகளுக்கு இடம் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக 70,000த்திற்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தனர். அமெரிக்கா எங்களுக்கு உதவியது. ஆனால் அதனால் பாகிஸ்தான் பொருளாதாரம் அதிகமாக பாதிக்கப்பட்டது. தலிபான்களுக்கு எதிரிகளாக ஆனோம். மேலும் பாகிஸ்தானில் தெஹ்ரிக் – இ – தலிபான் உள்ளிட்ட பல பயங்கரவாத குழுவினரும் பாகிஸ்தானிற்கு எதிராக செயல்பட்டனர். அமெரிக்காவின் ராணுவ தளம் அமைக்க ஏற்கனவே இடம் அளித்து பெரிய தவறு செய்து விட்டோம். இனி அந்த தவறை செய்ய மாட்டோம்’ என தெரிவித்துள்ளார்.