டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற சர்வதேச நீர் சங்கத்தின் உலக தண்ணீர் மாநாடு மற்றும் கண்காட்சி 2022ல், நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், டென்மார்க்கின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் லியா வெர்மெலின், டென்மார்க்கின் கூட்டுறவு வளர்ச்சித் துறை அமைச்சர் பிளமிங் முல்லர் மோர்டென்சன் ஆகியோர் ‘இந்தியாவின் நகர்ப்புற கழிவுநீர் நிலைமை’ என்ற வெள்ளை அறிக்கையை கூட்டாக வெளியிட்டனர். புதுமை கண்டுபிடிப்புகளுக்கான இயக்கம், நிதி ஆயோக், நீர்வளத்துறை அமைச்சகம், கங்கையை தூய்மைப்படுத்துவதற்கான தேசிய இயக்கம், டென்மார்க்கின் புதுமைகளுக்கான சர்வதேச நிறுவனம், இந்திய தொழில்நுட்பக் கழகம் (பாம்பே) ஆகியவை நகர்ப்புற கழிவுநீர் மேலாண்மைக்கான வெள்ளை அறிக்கையை தயாரித்துள்ளன. இது, கழிவுநீர் மேலாண்மையின் வெற்றிக் கதைகள், கழிவுநீர் சுத்திகரிப்பின் அவசியம், தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், பொதுமக்கள் பங்கேற்பதற்கான அணுகுமுறைகள், நிதியுதவி, விரைவான தரவு சேகரிப்புக்கான நவீன தொழில்நுட்பங்கள், நகர்ப்புற கழிவுநீர் சுத்திகரிப்பு செயல்திறனை அதிகரிப்பதற்கான பயிற்சி மற்றும் திறன்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டது.