விடுதலையயின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் பற்றிய படக்கதை புத்தகத்தை மத்திய அமைச்சர் திருமதி மீனாக்ஷி லேகி, டெல்லியில் வெளியிட்டார். அமர் சித்ரா கதா அமைப்புடன் இணைந்து இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அதிகம் அறிப்படாத 75 சுதந்திர போராட்ட பிரபலங்களின் கதைகள் இதில் உள்ளன. அதில் பேசிய அமைச்சர், ‘நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டங்களை வழிநடத்திய பெண்களின் வாழ்க்கையை இந்த புத்தகம் கொண்டாடுகிறது. காலனி ஆதிக்கம், ஆதிக்க சக்தியை எதிர்த்துப் போராடிய, உயிர் தியாகம் செய்த ராணிகள், பெண்களின் கதைகள் இப்புத்தகத்தில் உள்ளன. பாரதத்தின் கலாச்சாராத்தில் பெண்கள் கொண்டாடப்பட்டுள்ளனர். இங்கு பாலின பாகுபாட்டுக்கு இடமில்லை. போர்களத்தில் ஆண்களுக்கு இணையான போரிடும் தைரியமும் உடல் வலிமையும் பெண்கள் பெற்றுள்ளனர். பிரதமரின் தொலைநோக்கான, விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் வீராங்கனைகள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படுகின்றனர். கடந்த கால வரலாற்றை இளைஞர்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்யும்போது தான், விடுதலையின் கொண்டாட்டத்துக்குப் பொருள் இருக்கும்’ என கூறினார். 25 அறியப்படாத பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடங்கிய இரண்டாம் பதிப்பைத் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதுவும் விரைவில் வெளியிடப்படும்.