ஒன்றுபட்ட குருகிராம் ஹிந்துக்கள்

ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் உள்ள செக்டார் 37ல் உள்ள உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் ஹிந்து மற்றும் முஸ்லிம் குழுக்களுக்கு இடையே சிறிய மோதல் ஏற்பட்டது. அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்த முடிவு செய்திருந்தனர். இதற்கு அப்பகுதி ஹிந்துக்களும் சீக்கியர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகமும் தடை விதித்தது. தடையை மீறி முஸ்லிம்கள் அடாவடியாக அங்கு தொழுகை நடத்த முற்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அங்கு கூடிய உள்ளூர் ஹிந்துக்கள் ஹோமம் வளர்த்து வழிபாடு செய்தனர். மேலும் அங்குள்ள சீக்கிய குருத்வாரா வளாகத்திற்குள் முஸ்லிம்கள் தடையை மீறி நமாஸ் செய்வதை தடுக்கும் விதமாக அமிர்தசரஸ் மற்றும் டெல்லியில் இருந்து வந்த சீக்கிய குழுவினர் காவல் காத்தனர். விளையாட்டு மைதானத்தில் நடைபெறுவதை படம் பிடிக்க வந்திருந்த ஊடகத்தினரை அப்பகுதி மக்கள் அனைவரும் ‘விலைபோன ஊடகத்தினர்தானே நீங்கள், உங்களிடம் பேச எங்களுக்கு எதுவும் இல்லை, எல்லா முஸ்லிம்களும் என்.டி.டி.வியின் மருமகன்கள், உங்களுக்கு நிதியளிப்பவர்களின் பார்வையை மட்டுமே நீங்கள் காட்டுகிறீர்கள், பத்திரிகைகள் தவறான செய்திகளை அச்சிடுகின்றனர். இதெல்லாம் ஒரு நகைச்சுவை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கடந்த வாரம் இங்கு விளையாடிய குழந்தைகள் தாக்கப்பட்டனர். அந்தச் செய்தியை யாராவது காட்டினீர்களா? எந்தப் பத்திரிகையும் அந்தச் செய்தியை அச்சிடவில்லையே? எந்த ஊடகத்தையும் நாங்கள் நம்பவில்லை’ என கூறி விரட்டியடித்தனர்.