தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் புலவனூர் கிராமத்தில் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக கடையம் காவல் ஆய்வாளர் ரெகுராஜன், சர்ச் அருகில் உள்ள வீட்டு வாசலில் இந்து முன்னணி கொடியேற்றக் கூடாது என மிரட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவியது. கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு இந்து முன்னணி இளைஞரை கைது செய்த கடையம் காவல் ஆய்வாளர் ரெகுராஜனின் ஒருதலைப்பட்சமான போக்கை கண்டித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக அடக்குமுறையில் ஈடுபட்ட அந்த காவல் ஆய்வாளர் மிரட்டலுக்கு அஞ்சாமல் அந்த வீட்டுப் பெண்மணியும் இந்து முன்னணி இளைஞரும் வாசலில்தானே கொடியேற்றக் கூடாது, நாங்கள் எங்களின் வீட்டு உச்சியில் கொடியேற்றுவோம் என்று வீட்டு உச்சியில் கொடியேற்றினர். தற்போது இந்து முன்னணி புகாரின் பேரில் கிறிஸ்தவ சர்ச் ஆக்கிரமித்து வைத்திருந்த 70×6 = 420 சதுரஅடி அரசு இடத்தில் இருந்த கட்டடத்தை தென்காசி மாவட்ட வருவாய்துறையினர் இடித்து அகற்றினர்.