நெறிமுறையற்ற ஃபைசர் வியாபாரம்

ஃபைசர் நிறுவனத்தின் நெறிமுறையற்ற வியாபார நடைமுறைகள் சமீப காலமாக வெளிச்சத்துக்கு வருகின்றன. ஃபைசரின் கொரோனா தடுப்பூசிகளுக்கு அந்நிறுவனம் சில நாடுகளுடன் போட்டுள்ள ஒப்பந்தத்தில் தடுப்பூசிகளால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு எந்த நாடும் அதனை பொறுப்பாக்கக்கூடாது, அந்த நாட்டு அரசு சொத்துகளை பிணையாக தரவேண்டும். தடுப்பூசிகளை திருப்பி அனுப்பக்கூடாது, ஒப்பந்தத்தை அந்த நாடுகள் தடை செய்ய முடியாது என பல நிபந்தனைகளை விதித்துள்ளது. அவ்வகையில் தற்போது, ஃபைசரால் நிதி ஆதாயம் பெற்ற விஞ்ஞானிகள், அஸ்ட்ராஜெனெகா  நிறுவனத்தின் கொரோனா  தடுப்பூசிகள், புற்றுநோய்க்கு வழிவகுக்கும், நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகளுக்கு பாதுகாப்பற்றது என்று பேசிவருகின்றனர் என அஸ்ட்ராஜெனகா குற்றம்சாட்டியுள்ளது. இதனை ஃபைசர் மறுத்துள்ளது.

சுவாரசியமாக, ஒரு வழக்கில், டிசம்பர் 6, 2021க்குள் ஃபைசர் தடுப்பூசி குறித்த தரவுகளை சமர்ப்பிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அமெரிக்க அரசின் ‘உணவு மற்றும் மருந்து சங்கம்’ (US FDA), ஃபைசர் ஆவணங்களை முழுமையாக தயாரிப்பதற்கு குறைந்தபட்சம் 2096 வரை கால அவகாசம் தேவை என்று கோரியுள்ளது. இது எழுத்துப்பிழை அல்ல. உண்மையிலேயே ஃபைசரின் தரவுகளை சமர்ப்பிக்க 75 ஆண்டுகள் கால அவகாசம் கேட்டுள்ளது அமெரிக்க அரசுத்துறை நிறுவனம். இது அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள ஃபைசரின் செல்வாக்கையே காட்டுகிறது. இப்படிபட்ட ஃபைசருக்கு ஆதரவாகத்தான் பாரதத்தில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகளும், சமூக செயற்பாடாளர்களும் போராடி வருகின்றனர்.