காஷ்மீரில் சமீபத்தில் உத்தர பிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்த மூன்று நபர்களை பயங்கரவாதிகள் கொன்றனர். அங்கு சமீப காலமாக, ஹிந்துக்களையும் வெளிமாநிலத்தவரையும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு யு.எல்.எஃப் என்ற யுனைட்டட் லிபரேஷன் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. காஷ்மீரை விட்டு வெளியேற மற்றவர்களையும் எச்சரித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வேட்டையாடி வரும் நிலையில் இவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டு ஜம்மு காஷ்மீரில் விரைவில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கலாம்.