பிரிட்டன் உளவு அமைப்பு தகவல்

சீனாவின் ‘வூஹான் ஆய்வகத்தில்தான் கோவிட் தோன்றியது’ என்பதை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால், வூஹான் ஆய்வகத்தில் கடந்த 2019, நவம்பரில் ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்கள் பலர் கொரோனா போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என அமெரிக்க உளவு அமைப்பின் அறிக்கை வெளியானது. இதைத் தொடர்ந்து, கொரோனாவின் தொற்றின் தோற்றம் குறித்து விரைந்து விசாரணை நடத்தவும், 90 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். இந்நிலையில், ‘சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்த வைரஸ் தான் கோவிட்19 என்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன’ என, பிரிட்டன் உளவு அமைப்பு நம்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.