சுப. உதயகுமாரன், முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆர்.எஸ்.எஸ் ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் அதன் துணை நிறுவனமான சேவாபாரதியின் கொரொனா மீட்பு பணியின் ஒரு பகுதியாக துவக்கிய ‘இலவச கோவிட் கேர் சென்டர்’ திறப்பு விழாவில் அமைச்சர்களும் அதிகாரிகளும் பங்கேற்றதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘உங்கள் கட்சியின் ஈழப் பிரச்சினை நிலைப்பாடு, வாரிசு அரசியல் போன்றவை எங்களுக்கு ஏற்புடையவை இல்லை. உங்கள் கட்சியும், அரசும் தடுமாறினால் கடுமையாக எதிர்ப்போம்.’ என்று விமர்சித்திருக்கிறார். தேசமெங்கும் தங்களுடைய உயிரை பணயம் வைத்து கொரோனா நிவாரண சேவைகள் செய்து வரும் ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதியின் பணிகளை மக்கள் அறிவார்கள். இந்நிலையில், கூடங்குளம், தூத்துக்குடி கலவரங்கள், வெளிநாட்டு நிதி மோசடி உட்பட சுமார் 160க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரான சுப. உதயகுமாரன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை குற்றம் சொல்ல சிறிதும் லாயக்கற்றவர் என்பதுடன் ஒரு முதல்வரையே மிரட்டும் தொணியில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.