இரண்டு லட்சம் கி.மீ சாலை

பாரத் @ 75 ‘பாரதத்தை மேம்படுத்துதல்: நாளைக்காக இன்றே’ என்ற ஐ.சி.சியின் வருடாந்திர அமர்வில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘வரும் 2025க்குள் இரண்டு லட்சம் கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பை உருவாக்க அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. பாரத்மாலா 1 மற்றும் 2 திட்டங்களின் கீழ் 65,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்பட்டு வருகிறது. மின்சார வாகனங்களுக்கான மிகப்பெரிய சந்தையாக பாரதம் மாறி வருகிறது. குறைந்த விலையில் உள்நாட்டு பேட்டரி தொழில்நுட்பங்களை உருவாக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பசுமை நெடுஞ்சாலை பணியின் கீழ், தேசிய நெடுஞ்சாலைகளில் மரம் வளர்ப்பு மற்றும் இடமாற்றம் போன்ற பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில், உள்ளூர் சமூகங்கள், விவசாயிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்’ என்றார்.