ஹிந்துக்களுக்கு எதிரான டுவிட்டர்

வங்கதேசத்தில் முஸ்லீம் வன்முறை கும்பல்களால் ஹிந்து சிறுபான்மை சமூகத்தின் மீது இழைக்கப்படும் கொடூரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் இஸ்கான் வங்கதேசம் மற்றும் வங்கதேச ஹிந்து ஒற்றுமை கவுன்சில் என்ற இரண்டு ஹிந்து அமைப்புகளின் கணக்குகளை டுவிட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது. இந்த இரண்டு டுவிட்டர் கணக்குகளும் இணையத்தில் ஏன் கிடைக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துமாறு டுவிட்டர் நிறுவனத்திடம் கிருஷ்ண உணர்வுக்கான சர்வதேச சமூகம் (இஸ்கான்) விளக்கம் கேட்ட பிறகே இது வெளிச்சத்திற்கு வந்தது. இஸ்கான் அமைப்பின் தகவல் தொடர்பு இயக்குனர் யுதிஷ்டிர் கோவிந்த தாஸ், வங்கதேச அரசின் அழுத்தம் காரணமாக கணக்குகள் அகற்றப்பட்டதா? என்று கேட்டதுடன் அவசரநிலைக்கு மத்தியில் ஹிந்துக்களின் குரல்கள் ஒடுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு கோரி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு வங்கதேச ஹிந்து ஒற்றுமை கவுன்சில் கடிதங்கள் எழுதியிருந்தது. இதனையடுத்தே ஹிந்துக்களின் குரலை ஒடுக்கும்பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.