ட்விட்டர், யூடியூப் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களால் வெளியேற்றப்பட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த தகவல் தொடர்பு தளத்தை சமீபத்தில் துவங்கிநார். ‘டொனால்ட் ஜே டிரம்பின் மேசையிலிருந்து’ (From the Desk of Donald J Trump) என்ற தனது சொந்த ஒரு வழி தொடர்பு தளத்தை டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார். அவரின் தகவல்களின் ஸ்கிரீன் ஷாட்டை மற்ற சமூக வலத்தளத்தில் பகிரக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. டிரம்பின் முன்னாள் பிரச்சார மேலாளர் பிராட் பார்ஸ்கேல் இதனை உருவாக்கியுள்ளார். முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் டிரம்ப் 45office.com என்ற வலைத்தளத்தை தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.