நைஜீரியாவுக்கு டிரம்ப் வாழ்த்து

நைஜீரிய அதிபர் முஹம்மது புஹாரி, பிரிவினைவாத இயக்கங்களுக்கு எதிராக டுவிட்டரில் ஒரு எச்சரிக்கையை விடுத்தார். இதனை “தவறான நடத்தை” என கூறி அவரது கணக்கை 12 மணி நேரம் நிறுத்தி வைத்தது டுவிட்டர். இதனால், நைஜீரியாவின் தகவல்துறை அமைச்சர் லாய் முகமது,  தங்கள் நாட்டில் டுவிட்டரின் நடவடிக்கைகளை காலவரையின்றி நிறுத்திவைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், “நைஜீரியாவிற்கு வாழ்த்துக்கள், தங்கள் அதிபரை டுவிட்டர் தடை செய்ததால் டுவிட்டரை அவர்கள் தடை செய்தனர். பேச்சு சுதந்திரத்தை  அனுமதிக்காத டுவிட்டர், முகநூலை அதிகமான நாடுகள் தடை செய்ய வேண்டும்.  நான் ஜனாதிபதியாக இருந்தபோதே இதைச் செய்திருந்திருக்க வேண்டும்.” என்று முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.