தேச விடுதலை போராட்ட வீரர்களான பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்ட ஷஹீதி திவாஸ் தினத்தையொட்டி கருத்துத் தெரிவித்த, இங்கிலாந்தில் உள்ள காலிஸ்தானி பிரிவ்னைவாதியும் தல் கல்சா அமைப்பின் தலைவருமான குர்சரண் சிங், “பகத்சிங் ஒரு துரோகி மற்றும் பிராமணர்களின் காலணிகளை நக்குபவர்” என மிகவும் கீழ்தரமாக விமர்சித்துள்ளார். காலிஸ்தானி பிரிவினைவாதிகளின் இந்த சமீபத்திய பேச்சு அவர்களது உண்மை முகத்தை வெளிப்படுத்தி உள்ளது. பகத் சிங் சிறைவாசத்தின் போது ‘நான் ஏன் நாத்திகன்?’ புத்தகத்தை எழுதியவர். பிரிட்டிஷ் காலத்தில் இருந்த பிராமண ஜாதிப் படிநிலையை கடுமையாகக் கண்டித்தவர் என்றும் அறியப்பட்டவர். மார்ச் 23, 1931 அன்று லாகூர் சதி வழக்கில் தூக்கிலிடப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களான சிவராம் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் தாபர் ஆகியோருடன் பகத் சிங்கையும் பாரதமே நினைவுகூர்ந்த நாளில் சமூக ஊடகங்களில் வெளியான இந்த வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில், இது ஷஹீதி திவாஸ் அன்று வீடியோவை வெளியிடும் ஒரு திட்டமிட்ட முயற்சியாகவேத் தெரிகிறது. குறிப்பாக காலிஸ்தான் இயக்கத்தின் பக்கம் நிற்காத மற்றும் பாரதத்தின் பக்கம் உறுதியாக நிற்கும் ஏராளமன ஹிந்துக்கள், சீக்கியர்களிடையே பிரிவினை உணர்வுகளைத் தூண்டுவதற்கு இது வெளியிடப்பட்டு உள்ளது. தல் கல்சா நிறுவனர் ஜஸ்வந்த் சிங் தெகேதார், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், காலிஸ்தானி இயக்கத்தின் ஐ,எஸ்,ஐ உளவு அமைப்புடனான தொடர்புகளை அம்பலப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, இங்கிலாந்தைச் சேர்ந்த தல் கல்சா தலைவர் குர்சரண் சிங்கின் இந்த செயல்பாடு வந்துள்ளது. தேகேதார் தனது பேட்டியில், “நீங்கள் பேசும் காலிஸ்தான் வாக்கெடுப்பு, பஞ்சாபில் உள்ளவர்கள் அதைக் கோரவில்லை. இது ஒரு 2020 அமைப்பு, அவர்கள் ஐ.எஸ்.ஐயின் அறிவுறுத்தலின் பேரில் பொதுவாக்கெடுப்பு என்று பேசுகிறார்கள். பொதுவாக்கெடுப்பு என்பதை பாரத பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அல்லது பாரத குடிமக்கள் அதை விரும்புகிறார்கள் என்றால், அது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் அது கனடா, அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் குடியிரிமை பெற்றவர்களுக்கு அல்ல. அவர்களுக்கு இதனை கேட்க எந்த உரிமையும் இல்லை” என கூறினார்.