பரம்வீர் சக்ரா வீரர்களுக்கு மரியாதை

பண்பு மற்றும் கலாச்சார பயிற்சிமுனைவு அறக்கட்டளை சார்பில்,75வது சுதந்திர வருட அமிர்த மகோத்ஸவத்தை 1,000 பள்ளிகளில் கொண்டாடும் வகையில்,‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்றவர்களுக்கு ஆண்டு முழுவதும் மரியாதை செலுத்துவதற்கான தொடக்க விழா சென்னையில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்றது.இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர்ஆர்.என்ரவி, “நமது ராணுவத்தை நாம் வலுப்படுத்த வேண்டும்.அப்போதுதான் மற்ற நாடுகள் நமக்கு மரியாதை அளிக்கும்.நாம் பலவீனமாக இருந்தால, எதிரிகள் நம்மைச் சூழ்வார்கள்.இந்த தேசத்துக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் குறித்த வரலாற்றை, நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடம் எடுத்துக்கூறி அவர்கள் மனதில் உத்வேகத்தை ஏற்படுத்த வேண்டும்.லால்பகதூர் சாஸ்திரி ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற கோஷத்தை முன்வைத்தார்.இதனால், 1965 போரில் பாகிஸ்தானை நாம் தோற்கடித்தோம்” என கூறினார்.இந்த விழாவில், அறக்கட்டளை தலைவர் என்.கோபாலசுவாமி, தென்பிராந்திய ராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஏ.அருண், பரம்வீர் சக்ரா விருது பெற்ற, ஓய்வு பெற்ற சுபேதார் மேஜர் மற்றும் கௌரவ கேப்டனான யோகேந்தர் சிங் யாதவ், அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் விகாஸ் ஆர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.