காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டம் போமியாஜி கி காதி கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷன்லால் பீல். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவர், கடந்த 7-ம் தேதி இரவு ஊருக்கு மத்தியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்கச் சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிலர், கிஷன்லாலை தள்ளி விட்டு, ஜாதியைச் சொல்லி திட்டி விரட்டியடித்தனர். இதனால், தண்ணீர் எடுக்காமல் கிஷன்லால் வீடு திரும்பினார். இதன் பிறகு, சுமார் 15 பேர் அடங்கிய கும்பல் ஒன்று, கிஷன்லால் வீட்டுக்கு வந்து, எங்கள் பகுதியிலுள்ள ஆழ்குழாய் கிணற்றில் எப்படி தண்ணீர் பிடிக்கலாம் என்று சொல்லி, அவரையும், அவரது மகனையும் இரும்பு கம்பிகள் மற்றும் கம்புகளால் மிகக் கடுமையாகத் தாக்கினர். இதனால் பலத்த காயமடைந்த இருவரையும், அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், அந்த வன்முறை கும்பல் அதனை தடுத்து நிறுத்தியது. இதனால், உயிருக்குப் போராடிய கிஷன்லால் மயங்கிச் சரிந்தார் கிஷன்லால். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு அக்கம்பகத்தினர் தகவல் அளிக்கவே, அங்குவந்த காவலர்கள் கிஷன்லாலை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அதற்குள் கிஷன்லால் இறந்து விட்டார். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் குற்றவாளிகளை கைது செய்தால்தான், உடலை வாங்குவோம் என்றும், அந்த குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நஷ்டஈடும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இந்த வன்முறையில் ஈடுபட்ட ஷகீல், நசீர், பப்லு ஆகிய 3 முஸ்லிம் நபர்களை காவல்துறை கைது செய்தது. இவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை முயற்சி ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இதில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.