கேரளாவில், பா.ஜ.க நடத்தும் ‘விஜய யாத்திரை’ மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. அம்மாநிலத்தின் பல பிரபலங்கள், பா.ஜ.கவில் உறுப்பினர்களாக இணைகின்றனர். தற்போது, அதில் ஐந்து திருநங்கைகள் உறுப்பினர்களாக இணைந்தனர். அதில் ஒருவரான அவந்திகா விஷ்ணு, பா.ஜ.கவில் இணைந்ததை குறித்து கூறுகையில், ‘நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவில் அலுவலக பொறுப்பாளராக இருந்தேன். நான் யார் என தெரிந்ததும், சக தோழர்கள் என்னை ஏற்கத் தயங்கினர், கேலி செய்தனர். இதனால் நான் அங்கிருந்து விலகினாலும், தொடர்ந்து இடதுசாரி ஆதரவாளராகவே இருந்தேன். ஆனால், திருநங்கைகள் மீதான கம்யூனிஸ்ட்களின் அன்பு போலியானது. அவர்கள் எங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, வேலைவாய்ப்பு, மேம்பாட்டு திட்டங்கள் போன்ற அனைத்திலும் நாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என உணர்ந்தேன்’ என்றார். மேலும், எனது சமூகத்தைச் சேர்ந்த பலர் விரைவில் பாஜகவில் இணைவார்கள். என்று தெரிவித்தார்.