உருமாறும் வைரஸ் பாதிப்புகள்

கடந்த 2019ல் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்று, உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ள தடுப்பூசிகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் இதன் தீவிரத்தை கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. உலகமே தற்போது ஆபத்தான காலகட்டத்தில் உள்ளது. இந்த ஆபத்திற்கு எந்த ஒரு நாடும் விதிவிலக்கு அல்ல. டெல்டா வகை கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், அது குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதே சமயம் தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை உலக நாடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் இந்த பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தபட்சம் 10 சதவீத மக்களாவது கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உலக நாடுகளின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.