ஜல்லிக்கட்டு காளைகள் கடத்தல்

தமிழகத்தின் மதுரை புறநகர் பகுதிகளில் சமீப காலமாக மாடு திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பல இடங்களில் கால்நடைகள், குறிப்பாக ஜல்லிக்கட்டு காளைகள் காணாமல் போனதாக மக்கள் புகார் அளித்தனர். இந்த மாடு திருடர்களைகாவல்துறையினர் தேடி வந்தனர். திண்டுக்கல் சாலையில் உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு துணை கண்காணிப்பாளர் தவமணிக்கு திருட்டு மாடுகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி மதுரைக்கு செல்வதாக தகவல் கிடைத்தது. அவர், மற்ற இரண்டு காவலர்களுடன் சேர்ந்து, சோதனைச் சாவடியில் அந்த வாகனத்தை நிறுத்த முயன்றார், ஆனால் வாகன ஓட்டுநர், காவல் அதிகாரியை கொன்றுவிட்டு தப்பிக்கும் நோக்கில், வேகமாகச் சென்று அருகில் உள்ள தடுப்புகள் மற்றும் காவல்துறையினர் மீது வாகனத்தை மோதினார். இதில் காயமடைந்த துணை கண்காணிப்பாளர் தவமணிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மாடு திருடர்கள் மீது அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சோதனைச் சாவடி அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். ஜனவரி 22ம் தேதி, கொசகுளம் குளமங்கலம் சாலையில் அதே மினிட்ரக் வேகமாகச் சென்றதைக் கண்டறிந்து இதில் ஈடுபட்ட 5 முஸ்லிம் நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ஹரியானாவைச் சேர்ந்த ஏ நசீர், ஆர் இர்பான், ஜே சுபைர், ஆர் ஷாகுல், மற்றும் ஏ ஹக்முதீன் என தெரியவந்தது. மதுரை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் இருந்து மாடுகளை திருடும் இந்த கும்பல், திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், திருப்பூர் தாராபுரம் வழியாக கேரளாவுக்கு அவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்ய கடத்தியது. அவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை கடத்தலுக்கு குறிவைத்து திருடுவதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து நம்பர் பிளேட் இல்லாத கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம், 11 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பலை சேர்ந்த மேலும் 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ‘பசுக் கடத்தலில் பெரும்பாலும் முஸ்லிம் நபர்கள் ஈடுபட்டாலும், தமிழ் ஊடகங்கள் அவர்களை வட இந்தியர்கள் என பொதுமைப்படுத்தி, வடக்கு தெற்கு வெறுப்பை அதிகரிப்பதுடன் இதில் பின்புலமாக உள்ள மத அமைப்புகளையும்அவற்றின்தன்மையையும் திட்டமிட்டு மறைக்கின்றன’ என சமூக ஊடகப் பயனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.