அறிமுகமாகும் டாப் 5 ஆயுதங்கள்

இந்த ஆண்டு இந்திய ராணுவம் உலகிற்கு ஐந்து முக்கிய ஆயுத அமைப்புகளை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

அல்ஃபா எஸ் (ALFA S): Air Launched Flexible Asset எனப்படும் இந்த அமைப்பானது தன்னகத்தே நான்கு மிதவை குண்டுகளை கொண்டிருக்கும். போர் விமானத்தில் இருந்து இந்த அமைப்பை ஏவும் விமானி அதற்குள் இருக்கும் மிதவை குண்டுகளை இலக்குகளை நோக்கி செலுத்த முடியும். இதனை என்.எஸ்.ஆர்.டி எனும் தனியார் நிறுவனமும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் (ஹெச்.ஏ.எல்) இணைந்து தயாரிக்கின்றன.

என்.ஏ.ஜி எம்.கே 2 (NAG MK 2): இது ஏற்கனவே உள்ள என்.ஏ.ஜி டாங்கி எதிர்ப்பு ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். இந்த புதிய ஏவுகணை ஹெலினா மற்றும் சாண்ட் ஏவுகணைகளில் உள்ள பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பெறும் எனவும் இதன் தாக்குதல் வரம்பு, திறன் ஆகியவைஅதிகரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதனை டி.ஆர்.டி.ஓ தயாரித்து வருகிறது.

ஸோரோவர் லகுரக டாங்கிகள் (ZORAWAR Light Tank): ஸோராவர் இலகுரக டாங்கியானது டி.ஆர்.டி.ஓ மற்றும் எல்&டி நிறுவன கூட்டு முயற்சியில் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் முதலாவது சோதனை டாங்கி வெளிவரும் எனவும் 2024ல் இதன் சோதனைகள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

எஸ் 4 ஸ்டார் (S4 Star): இந்த அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் தற்போது கட்டுமானத்தில் உள்ளது. இதனுடைய கட்டுமானப் பணிகள் சுமார் 80 சதவீதத்தை அடைந்துள்ளது. இறுதிகட்ட பணிகள் முடிவடைந்ததும் பல்வேறு முக்கிய கருவிகள் பொருத்தப்படும். இதன் கடல் சார்ந்த சோதனைகள் 2025ம் ஆண்டு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேஜாஸ் எம் கே 2 (Tejas Mk 2): இது தற்போதைய தேஜாஸ் எம்.கே 1 விமானத்தை விடவும் அளவில் பெரியது. பல்வேறு காரணங்களால் தற்போது ஒரு வருட தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இன்னமும் 2023ல் முதல் விமானத்தை அறிமுகப்படுத்தும் காலக்கெடுவை மாற்றவில்லை. எனவே இது இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படலாம். இதன் முன்னேற்றத்தை அடுத்த ஆண்டு வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.