தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழக போக்குவரத்து கழகங்களில், தி.மு.கவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் வைப்பதுதான் சட்டம் என்றாகிவிட்டது. இந்நிலையில், ஆம் ஆத்மி தொழிற்சங்கத்தினர், தொ.மு.ச., கிளை, மண்டல நிர்வாகிகளின் வசூல் பட்டியலை வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த பட்டியலில், ‘வண்டி போஸ்டிங் பணிக்கு ரூ. 12 ஆயிரம், லைட் டூட்டி ரூ. 25 ஆயிரம், டிப்போ டிரான்ஸ்பர் ரூ. 25 ஆயிரம், ஓ.டி பணிக்கு ரூ. 50 ஆயிரம், தி.மு.க தலைவர்களின் பிறந்த நாள் நன்கொடை ரூ. 1,500, தொ.மு.ச சந்தா ரூ. 500 – ஏஜன்ட், ஆளுங்கட்சி தொழிற்சங்கம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களின் வசூல் பட்டியல் இப்படி பொதுவெளியில் வெளியாகிவிட்டதால் தொ.மு.ச நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.