மூன்றாவது வைஃபை இந்தியா விர்ச்சுவல் உச்சிமாநாடு 2022ல் கலந்துகொண்டு உரையாற்றிய தொலைத்தொடர்புத் துறை (DoT) செயலாளர் கே. ராஜாராமன், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பொது வைஃபை ஹாட்ஸ்பாட்களின் விரைவான வளர்ச்சியின் மூலம், சிறு குறு தொழில்முனைவோருக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். பி.எம் – வாணிI திட்டத்தின் கீழ் 56 ஆயிரம் அணுகல் புள்ளிகள் நிறுவப்பட்டு உள்ளன. ஆனால் நாட்டில் வைஃபை சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிக அளவில் உள்ளன. இணைய ரீசார்ஜ் வவுச்சர்களை பொதுத் தரவு அலுவலகங்களுக்கு விற்பதன் மூலம் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் பயனடைகின்றனர். ஒவ்வொரு ஹாட்ஸ்பாட்டும், 2 முதல் 3 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை வழங்கும். 2022ம் ஆண்டில் தேசிய டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் கொள்கை இலக்கின்படி 10 மில்லியன் ஹாட்ஸ்பாட்களை உருவாக்கப்படும். இதன்மூலம், 20 முதல் 30 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாகும்’ என்று கூறினார்.