சர்ச்சைக்குரிய ஞானவாபி கட்டடத்தில் ஆய்வு செய்தபோது சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிவலிங்கம் இருந்த இடத்தை சீல் வைக்க வாரணாசி நீதிமன்ற சிவில் நீதிபதி ரவிக்குமார் திவாகர் உத்தரவிட்டார். இதையடுத்து தற்போது, நீதிபதி ரவிக்குமார் திவாகருக்கு பதிவுத் தபால் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. ‘இஸ்லாமிய ஆகாஸ்’ என்ற இயக்கத்தால் அனுப்பப்பட்ட அக்கடிதத்தில், பாரதத்தில் வெறுப்பு அரசியல் நடக்கும் காலங்களில் நீதிபதியும் காவியாக மாறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அவரை ‘காஃபிர்’ மற்றும் ‘விக்கிரக வழிபாட்டாளர்’ என்று கூறி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் கடிதம் உத்தரப் பிரதேச காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது நீதிபதியின் பாதுகாப்புக்காக 9 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.