மத்தியப் பிரதேச மாநிலம் கிழக்கு நிவார் மாவட்டத்தில் உள்ள ஆஷாபூர் இந்திரா சர்க்கிள் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் நபர் மோனு என்ற ஜன்பாஸ் மன்சூரி. அதே பகுதியில் வசிக்கும் ஹிந்துப் பெண் ஒருவர், கந்த்வாவிலுள்ள ஒரு நர்ஸிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். மோனு, அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி கல்லூரிக்குச் போதும்போதெல்லாம் பின்தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்துள்ளார். ஆனால், அப்பெண் மோனுவின் காதலை ஏற்கவில்லை. இதுகுறித்து அப்பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அப்பெண்ணின் பெற்றோர், மோனுவின் பெற்றோரிடம் இதை எடுத்துச்சொல்லி கண்டித்துள்ளனர். ஆனாலும், மோனு வற்புறுத்தலைத் தொடர்ந்தார். முஸ்லிம்மாக மதம் மாறி என்னை திருமணம் செய்துக்கொள். இல்லையெனில் உன்மேல் ஆசிட் வீசிவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். அந்த பெண்ணின் அலைபேசி எண்ணுக்கு தான் துப்பாக்கியுடன் இருக்கும் போட்டோவை போட்டு, மரியாதையாக மதம் மாறி என்னை திருமணம் செய்துகொள். இல்லாவிட்டால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். கல்லூரி செல்லும் வழியில் தனது பைக்கில் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஏற்றிக் கொண்டு, அதிவேகத்தில் சென்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் பைக்கில் இருந்து கீழே குதித்து தப்பினார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டனர். மோனு அங்கிருந்து தப்பிவிட்டார். பின்னர், அந்த பெண் இது குறித்து ஹிந்து அமைப்பினரிடம் இதனை முறையிட்டார். ஹிந்து அமைப்பினர் அவரை அழைத்துக் கொண்டு சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மோனுவை கைது செய்தனர்.