ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு சமீபத்தில் ‘கோயில்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடை’ என்ற ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் ஒரு நாளைக்கு ஐந்து முறை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துகின்ற மசூதிகளில், இதுபோன்ற எந்தவொரு தடையையும் காங்கிரஸ் அரசு விதிக்கவில்லை. இது குறித்து சங்கேனர் சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் அசோக் லஹோட்டி, மாநில அரசுக்கு ஒரு புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘அரசின் இந்த பாரபட்சமான கொள்கையால், மக்கள் கோபத்தில் உள்ளனர். ஒன்று ஒலிபெருக்கிகளை முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் அல்லது கோயில்களிலும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.