இதுதான் தி.மு.க

“கிறிஸ்தவர்களின் வாக்குகள் இல்லையென்றால் தி.மு.க ஆட்சிக்கு வந்திருக்காது, தி.மு.க ஆட்சிக்கு வந்தது சிறுபான்மையினர் போட்ட பிச்சை” என்று கத்தோலிக்க பாதிரி ஜார்ஜ் பொன்னையா கூறியிருந்தார். “தமிழகத்தில் தற்போதுள்ள அரசு உங்களால் உருவாக்கப்பட்டது” என்று ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசி அதனை ஆமோதித்தார் தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின்.

இந்தப் பின்னணியில், லாவண்யா, தற்கொலைக்கு காரணமானவர்களில் ஒருவரான ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி, ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அவரை சிறை வாசலுக்கே சென்று சால்வை அணிவித்து வரவேற்றுப் பாராட்டினார் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ். இனிகோ இருதய ராஜ், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் என்ற கிறிஸ்தவ அமைப்பின் நிறுவனர்.  கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று தொடர்ந்து அழைப்பு விடுப்பவர்.

அவரது ஒரு நிகழ்ச்சியில் பேசிய கிறிஸ்தவ பாதிரி, “பெரும்பான்மை ஹிந்துக்கள் கொசுக்களை போன்றவர்கள்.  அவற்றை எளிதில் விரட்டியடிக்க முடியும்” என பேசினார். 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன், ஒரு கிறிஸ்தவ நிகழ்வில் பேசிய இனிகோ, “பா.ஜ.கவினர் யாகங்களால் அதிகாரத்தைப் பெற நினைக்கிறார்கள். பா.ஜ.கவினரையும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களையும் தோற்கடிக்க கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஒன்றிணைவார்கள், அதுதான் நமது ஒரே கடமை என பேசியிருந்தார்.

இதேபோல மணல் கடத்தலில் ஈடுபட்டு சிறை சென்ற பாதிரிகளை நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் சென்று சந்தித்துள்ளார். இவர் தனது ரூபி பில்டர்ஸ் மூலம் சேலையூர் ஏரியை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டியதாக 2014ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை போன்ற மதசார்புடையவர்கள், குற்றப் பின்னணி உடையவர்களும், இவர்களுக்கு மட்டுமே உதவும் தி.மு.க தலைமையும்தான் தமிழகத்தை தற்போது ஆள்கிறது என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.