‘பஞ்சாப்பை ஆளும் காங்கிரஸ் அரசு, தனியாருக்கு தடுப்பூசி சப்ளை செய்ததில் 32 கோடிக்கும் அதிகமாக செய்த ஊழல் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என, பா.ஜ.கவின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ஹர்தீப் சிங்வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், “எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசி எங்கே ராகுல்? அந்த தடுப்பூசிகள் ராஜஸ்தானில், குப்பை தொட்டிகளில் உள்ளது. பஞ்சாபில், அந்த தடுப்பூசிகள் மூலம் கொள்ளை லாபம் ஈட்டப்படுகிறது. இதுதான் காங்கிரஸ் கலாச்சாரம்” என கூறியுள்ளார். மேலும், 900 கோடி ரூபாய் செலவில் புதிய பார்லிமண்ட் கட்டடம் கட்டுவதை எதிர்க்கும் கட்சிகள், மஹாராஷ்டிராவில் ஒரு எம்.எல்.ஏ விடுதியைக் கட்ட 900 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதை மறைக்கின்றன. எதிர்க்கட்சிகள், புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகின்றன.இந்தாண்டு 412 டன் கோதுமை கொள்முதலில் 32 சதவீதம், பஞ்சாபில் இருந்து பெறப்பட்டுள்ளது.இதற்காக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 26 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.