‘ஆல் இந்தியா ப்ரொபஷனல் காங்கிரஸ்’ மாநாட்டில் கலந்துகொண்ட சர்ச்சைக்குரிய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இம்மா நாட்டிற்குப் பிறகு என்.டி.டி.வி பத்திரிகையாளரிடம் பேசிய அவர், “சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டால், அவர்கள் அமைதியாக உட்காருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. வெளிப்படையாக பிளவு ஏற்படும்” என கூறினார். ஆனால், நாட்டில் சிறுபான்மையினர் எவ்வாறு அடக்கப்படுகிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் விளக்கத் தவறிவிட்டார் அவர். மேலும், சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுபவர்கள் தலையை வெட்டுவோம் எனகூறி கன்னையா லால், உமேஷ் கோல்ஹே, பிரவீன் நெட்டாரு, நிஷாங்க் ரத்தோர் உள்ளிட்ட அப்பாவி ஹிந்துக்களை கொன்றுவருவது, ஹிஜாப் பிரச்சனையை காரணம் காட்டி நாட்டில் வன்முறைகளை திட்டமிட்டே அரங்கேற்றியது, ஹிந்துக்கள் விழாக்களில் துப்பாக்கி சூடு, வெடிகுண்டு வீசுதல், கல் எறிதல், கொலை செய்தல் என தேசமெங்கும் பல்வேறு இடங்களில் திட்டமிட்ட ரீதியில் வன்முறைகளை நிகழ்த்தி வரும் பின்னணியில் ரகுராம் ராஜன் இத்தகைய கருத்துக்களை வெளியிடுவது ஒன்றும் புதிதல்ல. அவர் ஏற்கனவே தேசத்திற்கெதிராக பேசிய சம்பவங்கள் பல உள்ளன. என்.டி.டி.வி நிருபரின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர், இலங்கையின் பாதையில் பாரதம் செல்லாது. 80களில் இலங்கை தமிழர்களை அந்நாட்டு அரசு ஒடுக்கியதுதான் உள்நாட்டுப் போருக்கும் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்று கூறினார். ஆனால், இதிலும் அவர், இலங்கையின் முந்தைய அரசின் பேரழிவுகரமான பொருளாதாரக் கொள்கைகள், சீனாவின் தலையீடு, கடன், ராஜபக்சே அரசின் ஊழல் பற்றி எதுவும் பேசாமல் மறைத்துவிட்டார்.